தமிழ்லீடர்

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிப்பு.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (17) பிற்பகல் கைதுசெய்யப்பட்ட, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில், கொழும்பு மேலதிக நீதவான் சனோஜா லக்மாலியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலமொன்றை வழங்குமாறும் நீதவான் தெரிவித்துள்ளார்.

அவர், மருதானை பிரதேசத்தில் வைத்து நேற்று (17) கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பிலான நபருடன் அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், தகவலை வழங்கினாரென்ற குற்றச்சாட்டுகளுக்காக, அவருக்கெதிராக பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்ததும், குறிப்பிடத்தக்கவிடயமாகும்.         

Add comment

Recent Posts

%d bloggers like this: