தமிழ்லீடர்

அதிக வெப்பத்தால் மயங்கி வீழ்ந்தவர் மரணம்!

யாழில் தற்போது அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ள நிலையில், இவர் யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.                             

Add comment

Recent Posts

%d bloggers like this: