தமிழ்லீடர்

அதிரடிப்படையினர் இரண்டு வாகனங்களை மாகந்துரே மதுஷின் வீட்டில் கைப்பற்றியது.

மாகந்துரே மதுஷின் இரண்டாவது மனைவியின் சிறிய தாய் எனச் சொல்லப்படும் பெண்ணின் வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை விசேட அதிரடிப்படையினர் இன்று கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சபுகஸ்கந்தை பமுனுவல, கோணவல என்ற பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்தே இந்த வாகனங்களை அதிரடிப்படையினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கைப்பற்றிய KDH ரக வாகனம் மதுஷின் இரண்டாவது மனைவியின் தாயாரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய வாகனம் பிராடோ ரக ஜீப் வண்டி எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாகவும்,. இந்த வாகனம் இரண்டாவது மனைவியின் சிறிய தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.       

Add comment

Recent Posts

%d bloggers like this: