அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்; ரணில்!

அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு காரணமான  அரசியல் சூழ்ச்சியின் விபரத்தையும் விரைவில் வெளியிடுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர்,

ஒக்டோபர் (26) நடந்த சூழ்ச்சியின் பின்னணியில் மைத்திரி – மகிந்த மட்டும் தொடர்புபடவில்லை. அவர்களின் குடும்பமும் இந்த அரசியல் சூழ்ச்சியுடன் தொடர்புபட்டுள்ளார்கள்.

அத்துடன், மகிந்த அணியில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. அவர்களின் விபரங்களையும் விரைவில் வெளியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலரும் இந்த அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்குண்டு இறுதியில் தப்பியுள்ளனர். கட்சியின் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு அவர்களின் விபரங்களை வெளியில்     தெரிவிக்கமாட்டேன்.

இந்த அரசியல் சூழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர எமது ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கடினமாக உழைத்துள்ளார்கள்.

நீதித்துறையில் நம்பிக்கை வைத்து செயற்பட்டவர்கள், அவர்களின் எண்ணப்படி நாம் வெற்றியடைந்துள்ளோம். நாம் எதிர்பார்த்த மாதிரி சர்வதிகாரம் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் வென்றது. என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: