தமிழ்லீடர்

 அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை 2.00 மணியளவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் எஸ்.சேயோன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை  அணிவித்து நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, த.கனகசபை, பா.அரியநேந்திரன்,  தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராசிங்கம்,

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதிமேயர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து இந்நிகழ்வை அனுஸ்டித்தார்கள்.

Add comment

Recent Posts

%d bloggers like this: