தமிழ்லீடர்

அமெரிக்காவின் முன்னால் தூதுவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்!

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர், எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அரசியல் வாழ்வில், 30 ஆண்டுகளை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நிறைவு செய்வதை முன்னிட்டு கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சமந்தா பவர் இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி பிற்பகல் 3 மணியவில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜதந்திரியும் கல்வியாளருமான சமந்தா பவர், பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.         

Add comment

Recent Posts

%d bloggers like this: