தமிழ்லீடர்

அமெரிக்கா செல்கிறார் கோத்தபாய!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்காக பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கான விண்ணப்பத்தை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த பணிகளை உறுதிசெய்யவே அவர் அமெரிக்கா செல்லவுள்ளார்.

குடியுரிமையை துறக்கும் பணிகளை வேகமாக மேற்கொண்டுள்ள கோத்தபாய, அடுத்த வாரம் 26ம் திகதி இலங்கையில் இருந்து அமெரிக்கா செல்லவுள்ளார்.

அமெரிக்கா செல்லும் வழியில், பிரித்தானியாவிலும் கோத்தபாய தங்கிச் செல்லவுள்ளதாகவும், பிரித்தானியாவிலுள்ள சிங்களவர்கள் பலர் கோத்தபாயவை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அங்குள்ள அமைப்பொன்று இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளதாகவும், அவர்களுடன்  கலந்துரையாடிய பின்னர் கோத்தபாய அமெரிக்கா செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: