அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு முழுமையான இலவச சுகாதார சேவை;

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலவச சுகாதாரத் சேவை பொதுமக்களுக்கு முழுமையாக கிடைத்திருப்பதாக, சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் சுகாரதார சேவை கிடைத்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் செல்வந்தர்களின் அரசாங்கம் என சிலர் கூறியபோதிலும், செல்வந்தர் அரசாங்கத்தினால் வறிய மக்களுக்கு தேவையான சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து வகைகளின் விலைகள் தற்போதைய அரசாங்கத்தில் குறைக்கப்படவில்லை. தொற்றா நோய்களிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட வேண்டும். தற்பொழுது தொற்றாநோய் பாரிய சவாலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் சுகாதார சேவை கட்டமைப்பை வலுவூட்டுவது தொடர்பான திட்டம் குறித்து ஆளுநர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட மகாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: