அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரசியலமைப்பு வரைவுத் திட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபைக்கு அடுத்த வாரமளவில் கையளிக்கப்படவிருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது அரசியல் அமைப்பு குறித்த பரிந்துரைகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டறியவுள்ளதாக அரசியல் கட்சிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கருத்துக்களையும் அரசியல் அமைப்பு சபையில் முன்வைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், நாட்டின் செயற்பாடுகளுக்கு நிறைவேற்று அதிகாரமே சிறந்ததென கூறும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதனை இரத்து செய்வதற்கு விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: