தமிழ்லீடர்

அரசியலமைப்பு பேரவை, நீதிமன்றத்தை விமர்சிப்பது பற்றி வெளியிட்ட கருத்து!

அரசியலமைப்பு பேரவை மற்றும் நீதிமன்றம் போன்றவற்றை விமர்சிப்பது அவற்றை குறைத்து மதிப்பீடு செய்யும் நடவடிக்கையல்ல, என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் அவரது ஊடக செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பற்றி தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு பேரவை முன்னெடுக்கும் தன்னிச்சையான நடவடிக்கை காரணமாக முழு அரச நிர்வாகமும் சீர்குலையும் நிலை ஏற்படுமென, மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இறுதியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது மகிந்த இதனை கூறியதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அண்மையில் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.         

Add comment

Recent Posts

%d bloggers like this: