தமிழ்லீடர்

அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும்.-கோட்டாபய ராஜபக்ச.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பொதுச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கட்சி உறுப்புரிமையை பெறுவார் என அறியமுடிகின்றது.

அதன் பின்னர் செயற்பாட்டு அரசியலில் நேரடியாகக் களமிறங்கும் கோட்டா, ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

மேலும் மக்கள் மத்தியில் தனக்குள்ள செல்வாக்கை நாடிபிடித்து பார்ப்பதற்காக, மாகாணசபைத் தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சியில் பிரசார பீரங்கியாக செயற்படவுள்ளார் என தெரியவருகின்றது.

எனினும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்தவர்கள், அதன்பிறகு குறித்த பதவிக்கு போட்டியிடமுடியாது.

எனவே, மஹிந்தவுக்கு பதிலாக கோட்டாபய ராஜபக்சவே களமிறக்கப்படவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: