தமிழ்லீடர்

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம்:

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களை விடுதலை செய்யுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, நீதி அமைச்சர் தலதா அத்துக்கோளரவிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கோரிக்கை தொடர்பில், எந்தவொரு பதிலையும் தெரிவிக்காது அமைச்சர் தலதா அத்துக்கோரள நழுவிச்சென்றார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள நேற்று நேரில் சென்று ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 490 குடும்பங்களுக்கு தேவையான உதவி பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த நிகழ்வில் உரையாற்றிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கோரிக்கை தொடர்பில் எந்தவொரு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ஊடகவியலாளர்கள் நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த அவர், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கதைத்துள்ளதாகவும், அவர் ஒரு முடிவில்லாத பதிலையளித்து நழுவி சென்றுள்ளார்.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: