தமிழ்லீடர்

அரசியல் சேறு பூசல்களால் போலி பிரச்சாரங்கள்; முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு;

அரசியல் சேறு பூசல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, சில அரசியல்வாதிகளும் பாதாளக் குழுவினருக்கும்  தொடர்பு இருப்பதாக பிரச்சாரங்கள் செய்யக் கூடாதென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில்,   சேறு பூசும் நடவடிக்கையால் அரசியல்வாதிகளும், சில அதிகாரிகளும் பாதிக்கப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அரசாங்கத்திலும் சில அரசியல் தலைவர்கள் பாதாளக் குழு தலைவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தது இரகசியமான விடயமல்ல, இது தொடர்பில் தற்போது  பேசாமல் அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: