தமிழ்லீடர்

அலுவலகம் இல்லாவிட்டாலும், மக்கள் சேவை தொடரும்’ மஹிந்த!

எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அலுவலகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடிகளைத் தோற்கடிப்பதற்குரிய நடவடிக்கைகளை, மக்களுக்காக முன்னெடுக்கும் பணிகள் தொடருமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையிலுள்ள தனது அலுவலகத்தில், புத்தாண்டுக்கான பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும், போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த வருடம், தேர்தல் வருகின்றதால் அதற்கு முகங்கொடுக்க, தனது முகாமை ​பலப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: