தமிழ்லீடர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டங்களுக்கு ஜனாதிபதி உடன்படிக்கையில் கைச்சாத்து.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஆகியோர், 445 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3 கடன் திட்டங்களில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸூக்கு 4 நாள் அரச விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மணிலா நகரில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்துக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, இந்த விசேட உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அந்த நாட்டு ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையிலான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.         

Add comment

Recent Posts

%d bloggers like this: