ஆசிரியர்களுக்கான இடமாற்றம் இரத்து.

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் வெளி வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பொருத்தமற்ற ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்துசெய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அத்தோடு பிற வலயங்களுக்கு இடமாற்றம் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு 2019ஆம் ஆண்டிற்கான இடமாற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது மேலும் வெளி வலயங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் மேன்முறையீடுகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் நல்லதம்பி பொதுச்செயலாளர் சரா. புவனேஸ்வரன் துணைத்தலைவர் கோ. செல்வநாயகம் துணைப்பொதுச் செயலாளர் சி. சசிதரன் கிழக்கு மாகாணச் செயலாளர் இரா. சச்சிதானந்தம் திருமலை மாவட்டச் செயலாளர் ம. பிரகாஷ் மற்றும் திருமலை வலயச் செயலாளர் கே. ரவிதாஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: