தமிழ்லீடர்

ஆதரவாளர்கள் பயணித்த வேன் மோதியதில் தெருவில் மாடுகள் பலி!

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் தியாவட்டவான் பிரதேசத்தில் வேன் மோதியதில் தெருவில் நடமாடிய 5 மாடுகள் பலியாகியதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முந்தினம் மாலை ஓட்டமாவடி பாலத்தை அண்மித்த தியாவட்டவான் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

புதிய ஆளுநரின் பதவியேற்புக்காகச் சென்றிருந்த  ஆதரவாளர்கள் பயணித்த வேன் திருகோணமலையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது தெருவில் நடமாடிய கட்டாக்காலி மாடுகள் மீது மோதி 5 மாடுகள் பலியாகி விட்டது.

வேனின் முன் பக்கம் சேதமாகியதுடன், விபத்தில் சிக்கிய 14 வயது பாடசாலை மாணவன் ஒருவனுக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.         

Add comment

Recent Posts

%d bloggers like this: