தமிழ்லீடர்

இணையத்தளம் புது வருடத் தினத்தில் அறிமுகம்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுவருடத் தினமான நேற்று செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 11.00 மணிக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் திருமதி.க.கணேசலிங்கம் ஆரம்பித்து வைத்தார்.

இவ் இணையத் தளத்தை பார்வையிடவும், இங்கே     கிளிக் செய்யவும், www.thbatti.health.gov.lk

போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள் வைத்திய நிபுணர் கே.மோகனகுமார்,வைத்திய நிபுணர் திருமதி.த.சசிகுமார், பிரதம கணக்காளர் டி.எஸ்.டேவிட், கணக்காளர் கே.எம்.அமீர் அலி, வைத்தியநிபுணர்களான எஸ்.மதனழகன்,எஸ்.அகிலன் மற்றும் வைத்தியர்கள், நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள், ஏனைய வைத்தியசாலை பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளார்கள்.

இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த போதனாவைத்தியசாலையின் பணிப்பாளர், சுகாதார அமைச்சின பணிப்பின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளமே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குரிய உத்தியோக பூர்வமான இணையத்தளமாகும். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

சமூக இணையப் பக்கங்களான முகநூல் மற்றும் twitter என்பன இவ் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, பல போலியான முகநூல் பக்கங்கள் இவ் வைத்தியசாலை சார்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பணிப்பாளர், இவ்விணையத்தளம் ஊடாக கிளினிக் தகவல்கள், சுகாதார சேவை தொடர்பான தகவல்கள், நடமாடும் இரத்ததான திகதிகள், சுகாதார புள்ளிவிபரங்கள், ஆளணிபற்றிய தகவல்கள் மற்றும் ஏனைய சுகாதார தகவல்களையும் பொதுமக்களால் பெறக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.             

Add comment

Recent Posts

%d bloggers like this: