இனங்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தும் சர்வமத செயற்பாடுகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

நேற்றய தினம் (01)ஆம் திகதி இனங்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தும் சர்வமத செயற்பாடுகளில் ஊடகத்தின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தும் செயலமர்வு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் எகட் ஹரிதாசின் சர்வமத ஒன்றியமும் இணைந்து எற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு எகட் ஹரிதாசின் இணைப்பாளர் இக்னேசஸ் சில்வெஸ்டர் தலைமையில் நடைபெற்றது.

பல்லின மக்களை இணைத்து சகவாழ்வு வாழ்வதற்காக  சர்வமத ஒன்றியத்திற்கான உருவாக்கம் ஆரையம்பதி, கல்லடி, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் செயல்படுவதாகவும் சமாதானம் மற்றும் சகோதரத்துவம் காக்கப்படுவதற்காக தமிழ் முஸ்லிம் மக்களை இணைத்து பதுளை,ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களுக்கு எடுத்துச் சென்று  சிங்கள மக்களோடு அளவளாவி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உறவுப் பாலமாக இந்நிறுவனம் செயற்படுவதாக இணைப்பாளர் கூறினார்.

இந்நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட அரசியல் ஆய்வாளர் ஏ. ஜதீன்திரன் சமூகநல்லிணக்கத்திற்காக தகவல்களை கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பும் எதிர்கொள்ளும் சவால்களும் பற்றி விளக்கமளித்தார்.

சர்வமதத் தலைவர்களான எஸ்.சிவபாலன், எ.ஜே.எம். இலியாஸ் மௌலவி உள்ளிட்ட பிரதேசச் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: