தமிழ்லீடர்

இன்று அதிகாலை இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் இலங்பைக்கு ஆபத்து இல்லை

இன்று அதிகாலை இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் 43 பேர் பலியாகி உள்ளதுடன் 600க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் இறப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது இந்தோனேசியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சுனாமி ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் பெரிய சுனாமி அந்த தீவை தாக்கி உள்ளது.

இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் இந்த சுனாமிப் பேரலை தாக்கி உள்ளது தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜாவா தீவிற்கும் சுமத்ராவிற்கும் இடையில் இந்த சுனாமி உருவாகி உள்ளதுடன் இந்தோனேசியாவின் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை தாக்கியுள்ளது.

சுனாமியில் கடல் நீர் மொத்தமாக உள்ளே வந்துள்ளதுடன் பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை சேர்ந்த வீடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதுடன் 5000க்கும் அதிகமான வீடுகளுக்குள் நீர் புகுந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது.

இந்த சுனாமியின் காரணம் எரிமலை வெடிப்பு என கூறப்பட்டுள்ளது அத்துடன் ஜாவா தீவுக்கு அருகில் இருக்கும் கரகட்டாவ் எரிமைலை திடீரென வெடித்துள்ளது இந்த வெடிப்பு ஏற்பட்டு பத்து நிமிடங்களில் சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளது. 

எரிலமை வெடிப்பால் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாகவே சுனாமி உருவாகியதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர் 

எவ்வாறாயினும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கைக்கு ஆபத்து இல்லை என கூறப்பட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: