தமிழ்லீடர்

இன்று அதிக வெப்ப நிலை நிலவ கூடும்! 

வடமேல் மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதப்புரம், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய பகுதியில் இன்று கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்பமான வானிலை நிலவுகின்றபோது பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும் எனவும் அந்த திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அதிகமான நீரை அருந்த வேண்டும் எனவும், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள்  அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: