தமிழ்லீடர்

இன்று அமெரிக்காவுக்கு ‘எலும்புக்கூடுகளின் மாதிரிகள்’ அனுப்பிவைக்கப்படவுள்ளது.

மன்னார் மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் சிலவற்றை இன்று (23) அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

132 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில், 300 மனித எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அகழ்வு பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி, ஷமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு அகழ்வு பணிகள் நேற்று (22) தொடக்கம் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதோடு, இம்மாதம் 30ஆம் திகதியன்று மறுப​டியும்  அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.               

Add comment

Recent Posts

%d bloggers like this: