தமிழ்லீடர்

இன்று ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்புக்கு இன்று (08) விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும்,
கிழக்கு மாகாண கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம், ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள குறித்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கே ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இக்கூட்டத்தில் பிரதேச மக்களின் பிரச்சினைகள் குறித்து அதிகம் கவனம் எடுக்கப்படவுள்ளதுடன் அதனை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு மாகாணத்தின் அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரும் பங்குபற்றி இக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: