தமிழ்லீடர்

இன்று பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது யாரை?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும்,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து  அமைக்கப்படவுள்ள பொது கூட்டணியில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

புஞ்சிபொரளையில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றுகையில்,
புதிய கூட்டமைப்பொன்றை அமைப்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நாட்டுக்கு இப்போது அறிக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: