இயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!!!

இலங்கையில் ஹோமாகம,பாதுக்க,ஹொரன, கொட்டாவ மற்றும் அவிசாவளை உள்ளிட்ட  பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக,மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.மேற்படி நாட்டின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் மரங்கள்  முறிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்தே இவ் மின்  தடை ஏற்பட்டுள்ளது.எனவே வீசிய கடும்  காற்றினால் பல பகுதிகளிலும் உள்ள42,000  நுகர்வாளர்களுக்கு மின்சாரத்தை  விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பன்னிப்பிட்டியவில்  மின்மாற்றி ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை  புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த  பகுதிகளில் மின்விநியோகம்  மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி  அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன  ஜயவர்தனமி  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: