இயற்கையின் சீற்றம் ஆரம்பம்!!!யாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்!!!

சூரியனின் வடதிசை நோக்கிய  பயணத்தின் விளைவாக இலங்கையின் அகலாங்குகளுக்கு  நேராக சூரியன் உச்சம்கொடுக்கவுள்ளது.இந்த  பயணம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து  15ஆம் திகதிவரை தொடரவுள்ளது.

எனவே இன்று(15ஆம்திகதி) நண்பகல்12.09  அளவில் யாழ்ப்பாணம் சுருவில்,அரியாலை, முகமாலை மற்றும் செம்பியன்பற்று ஆகிய  பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம்  கொடுக்கவுள்ளது.

குறித்த இடங்களில் வசிப்பவர்கள் அதிகளவு நீரை  அருந்த வேண்டும் அத்துடன் அதிகளவு  ஓய்வாகவும் இருக்க வேண்டும் என்றும் அத்துடன்  முதியோர்,குழந்தைகள் மற்றும் நோயாளிகள்  அவதானமாக இருக்க வேண்டும் காலநிலை  அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இதேவேளை நாளைய தினம் நாட்டின் பல  பிரதேசங்களில் மாலை நேரம் இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடும் எனவும்,எனவே பொது  மக்கள் அனைவரும் அவதானமாக இருக்க  வேண்டும் என காலநிலை அவதான  நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: