தமிழ்லீடர்

இராஜாங்க அமைச்சர் வில்பத்துக்கு விஜயம்!

முசலி பிரதேசத்துக்கு இன்று விஜயம் செய்திருந்த மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, வில்பத்து பகுதிக்கும் சென்று, வனவளபாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சருடன், கொழும்பிலிருந்து  வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்திருந்ததுடன் அவர்களுடன், முசலி வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து வந்துள்ளனர்.

மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மரிச்சிக்கட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்ட அக்குழுவினர், கல்லாறு  அமைச்சுக்குளத்தில்  கைத்தொழில் பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டுள்ளதுடன், விளாத்திக்குளம் பகுதியில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட காணிகளையும் அக்குழுவினர்  பார்வையிட்டுள்ளனர்.                     

Add comment

Recent Posts

%d bloggers like this: