இராணுவத்தில் இருந்து தப்பிய நாமல் குமார;

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற தொடர்பில், நாமல் குமாரவிற்கு எதிராக இராணுவ விசாரணைகள் முன்னெடுத்து அவரைக் கைதுசெய்யவிருப்பதாக இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளது.

நாமல் குமார தொடர்பில் தற்போது குற்ற விசாரணைப் பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், விசாரணைகள் நிறைவுற்றப் பின்னர் இராணுவ விசாரணைகள் தொடரும்  என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து  குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு எதிராக இராணுவத் தரப்பினரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாமல் குமாரவுக்கு எதிராகவும் எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: