இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் ஆத்மசாந்தி பூஜை!

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி பிராத்தனை பூஜை இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில்,
மட்டக்களப்பை சேர்ந்த உதயராசா பூசகர் தலைமையில் குறித்த ஆத்மசாந்தி சிறப்பு வழிபாட்டு பூஜையை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் உதவிக்குருக்களான மகேந்திரநாத குருக்கள் மற்றும் சிவாஜிகுருக்கள், சேரன்குருக்கள் ஆகியோர் இணைந்து நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து முல்லைத்தீவிற்கு சென்ற இந்து மதக்குருக்கள் உள்ளிட்டோர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு இடத்தில் இன்று காலை சென்று நன்பகல் வரைக்கும் யாகம் வளர்க்கப்பட்டு ஆத்மசாந்தி பூசைகள் சிறப்புற நடத்தப்பட்டதுடன். அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களும், கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: