தமிழ்லீடர்

இலங்கைக்கு ஜெனீவாவால் நெருக்கடி வரக்கூடும்.


“மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்ற வகிபாகம்” எனும் தலைப்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இன்று (வியாழக்கிழமை) இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விவாதம் ஒன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் இலங்கை நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற பல்வேறு ஜனநாயகம் மற்றும் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக வெளிநாடுகள் குற்றம் சாட்டிவந்தன.

அதை தொடர்ந்து இன்று 22 ஆம் திகதி தொடர்க்கம் நாளை 23 ஆம் திகதி வரையில் இடம்பெறும் இந்த விவாதத்தின் போது இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்ட விடயங்களால் பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்விடயம் குறிப்பாக இங்கு இடம்பெறவுள்ள விவாதத்தில் சிவில் சமூகத்தை                  சேர்ந்தவர்களான நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசணைச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து, அசங்க வெலிகல, மனித உரிமை செயற்பாட்டாளரான ஷிரீன் சரூர், அலன் கீனாம் ஆகியோர் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: