சீனாவுக்கும் இலங்கைக்கும் இருந்துவரும் நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில், சீனா உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு அன்பளிப்பாக 90 தண்ணீர் பௌசர்களை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முந்தினம் முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த சில காலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த காலநிலை காரணமாக அரசாங்கம் ஆரம்பித்த நிவாரணத் திட்டத்துக்கு உதவும் வகையில் ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதி கூடிய பெறுமதியுடைய தண்ணீர் பௌசர்களை சீனா அன்பளிப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
தண்ணீர் பௌசர்களை அன்பளிப்பு செய்ததை அடுத்து அவற்றின் சாவிகள் மற்றும் ஆவணங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூ ஆன் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். அந்த ஆவணங்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி கையளித்துள்ளார்.
Add comment