தமிழ்லீடர்

இலங்கைப் பிரஜை கைது!

சட்டவிரோதமானமுறையில் டுபாயிலிருந்து கொண்டு வரப்பட்ட சிகரட்டுகளுடன், இலங்கை பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று அதிகாலை, விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த, 24 வயதுடைய வர்த்தகரே சிகரட்டுடன் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரின் பயணப் பொதியிலிருந்து, 16,50,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பிலான, 30,000 சிகரெட்டுகள் அடங்கிய 150 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளார்கள்.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: