இலங்கையில் அதிகரித்து செல்லும் வாகனங்கள்!

நாட்டில் செயற்படுத்தப்பட்டு வரும் வாகனங்களின் எண்ணிக்கை, 7 மில்லியனை விட அதிக​ரித்துள்ள நிலையில், இன்று வாகன நெரிசல் அதிகரித்துள்ளதாக, அமைச்சர் பாட்டலி  சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான, வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில், நாடாளுமன்றத்தில் இன்று  நடைபெற்ற  குழுநிலை விவாதத்தில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பொது வாகனங்களை விட தனியார் வாகனங்களே வீதிகளில் அதிகமாக காணப்படுவதால், கடும் வாகன நெருக்கடி ஏற்படுவதுடன், வாகன நெருக்கடியைக் குறைப்பதற்கு பொது பயணிகள் போக்குவரத்தை நவீனமயப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: