தமிழ்லீடர்

இலங்கையில் அரச நிறுவனங்களின் வெற்றிடங்களுக்கு தலைவர்கள் நியமனம்.

நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு, தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த கலந்துரையாடலின் பின்னர் அரச நிறுவனங்களின் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட குழுவிற்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அண்மையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமையை அடுத்து, அமைச்சுக்களின் கீழ்வரும் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பதில் தற்போது வரை இழுபறிநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: