தமிழ்லீடர்

இலங்கையில் பல இடங்களில் மழை பெய்யும்!!!-மக்களுக்கு எச்சரிக்கை!!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு (மார்ச்17ஆம்,18ஆம்திகதிகளில்) இலங்கையின் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று இலங்கை வளிமண்டலவிய திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் இன்றைய நாளுக்காக வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மேல்,சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பலதடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: