தமிழ்லீடர்

இலங்கையில் வெற்றியளித்த செயற்கை மழை பொழிவு!!!!

இலங்கையில் மவுஸ்ஸாகலை நீர்தேக்கத்தில் செயற்கை மழை பொழிவதற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது.

மேற்படி மலையகத்தின் மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் காலை 11 மணியளவில் இரசாயணப் பதார்த்தம் இலங்கை விமானப்படையின் Y-12 ரக விமானம் மூலம் தூவப்பட்டது.

மேலும் இதையடுத்து பகல் 01.00 மணி முதல் 01.45 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே செயற்கை மழை பொழிவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் தினங்களிலும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் வான்பரப்பில் செயற்கை மழையை பொழிய வைக்க தீர்மானம்.

எனவே செயற்கை மழை பொழிவுக்கு இரசாயணப் பதார்த்தம் தூவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: