தமிழ்லீடர்

இலங்கை அதிகாரிகள் தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் குழு ஆய்வு செய்யவுள்ளதாக, இலங்கையின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ தலைமையிலான குழுவினர் தமிழகத்துக்கு சென்று அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை,இக்குழுவில் இலங்கையின் குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க உட்பட்ட அதிகாரிகள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அகதிகள் மத்தியில் பிரச்சினையாக உள்ள பிறப்புச்சான்றிதழ் மற்றும் பிரஜாவுரிமை சான்றிதழ்கள் பற்றியும் கூடிய கவனம் எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அகதிகள் சுயமாகவே மீளத்திருப்பி அனுப்புவது தொடர்பிலும், இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Add comment

Recent Posts

%d bloggers like this: