இலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்!!!

இராணுவத்தினரின் தேவையை  பூர்த்தி செய்வதற்காக பொது மக்களின் காணிகளை  ஆக்கிரமிப்பதை இலங்கை அரசாங்கம்  நிறுத்தாவிட்டால் மக்கள் போராட்டங்களின்  ஊடாக அவற்றை தடுத்துதகர்க்க வேண்டிய  நிலை ஏற்படும் என வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்!  இலங்கை அரசாங்கத்தின் காணி ஆக்கிரமிப்பு  மற்றும் அத்துமீறல்கள் தொடரும் பட்சத்தில் சர்வதேச  நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் பதில்  சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என  அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை படையினரின் படை  முகாம்களை நிரந்தரமான படை  முகாம்களாக மாற்றுவதற்காகவும், புதிதாக படைமுகாம்களை  நிறுவுவதற்காகவும் பொதுமக்களின்  காணிகளை சுவீகரித்துள்ளதாகவும்,  யாழ்ப்பாண மாவட்டத்தில் 43 பகுதிகளில் உள்ள காணிகளை  இலங்கை இராணுவமும், கடற்படையினருக்கேன்று கோரியுள்ளதாகவும்  யாழ் பிரதேசசெயலாளர்கள் ஏப்ரல்08 ஆம்  திகதி திங்கட்கிழமை நடைபெற்றிருந்த  யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்  கூட்டத்தில் அறிவித்திருந்தனர்.

எனவே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்  கூட்டத்தில்,இலங்கை இராணுவம் காணிகளை  கையகப்படுத்தும் விண்ணப்பங்களை  தற்காலிகமாக கிடப்பில்போடுவது என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் இந்த நிலையிலேயே மக்களின்  காணிகளை சுவீகரிக்க இராணுவத்தினர்  தொடர்ந்தும் முயற்சிப்பதாகவும் வடமாகாண  சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன்  எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

எனவே வடக்கு கிழக்கில்  மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் முப்படையினர்  முகாம்களை அமைக்க முயற்சித்தால் பொது  மக்களின் எதிர்ப்புக்களை இராணுவத்தினர் சந்திக்க நேரிடலாம் எனவும் அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: