தமிழ்லீடர்

இலங்கை ஜனாதிபதிக்கும், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கும், இடையே சந்திப்பு.

பிலிப்பைன்ஸிற்கு 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுடர்டேவை இன்று (16) சந்திக்கவுள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் விசேட அழைப்பிற்கிணங்க, இந்த விஜயத்தை ஜனாதிபதி நேற்று இரவு மேற்கொண்டு, பிலிப்பைன்ஸை சென்றடைந்துள்ளார்.

மணிலா நகரில் அமைந்துள்ள நினோ அக்குயுனா விமான நிலையத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை பிலிப்பைன்ஸின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சரால் வரவேற்கப்பட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மற்றும் பொருளாதாரத்தை  வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இரு நாடுகளுக்கிடையில் நீண்ட காலமாகத் தொடரும் இராஜதந்திர ரீதியிலான தொடர்புகளைப் புதிய பரிணாமத்துக்கு விஸ்தரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தவுள்ளது.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கும் செல்லவுள்ளதுடன் அதன் தலைவர் தகெஹிக்கோ நகாப்புடன் பேச்சுவார்த்தையிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகத்துக்கும் விஜயம் செய்யவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் 1967 ஆம் ஆண்டில் ஆரம்பமானதுடன், 58 வருடங்களில் நாட்டின் அரச தலைவர் ஒருவருக்கு, பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: