தமிழ்லீடர்

இலங்கை நாணயத்தாள்களுடன் இந்திய பிரஜை கைது!

இலங்கை பணம் ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் சிலவற்றை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்த, இந்திய பிரஜையொருவரை நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இந்திய பிரஜையென்பதுடன் 37 வயதுடையவரெனவும்,
நேற்று மதுரை இருந்து வருகை தந்த ஸ்பைட் ஜெட் என்ற விமானத்திலேயே, குறித்த நபர் பயணஞ்செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த நபரிடமிருந்து 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலங்கை நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: