தமிழ்லீடர்

இலங்கை படையினரால் 11 மீனவர்கள் கைது!!! 2 படகுகள் பறிமுதல்!!!

கச்சதீவு பகுதியில் 11 மீனவர்களை கைது செய்து இரண்டு படகுகளையும் கைப்பற்றி உள்ளது இலங்கை கடற்படை.

மேற்படி ராமேஸ்வரம்,கச்சதீவு பகுதியில் தமிழக மீனவர்கள் படகில் சென்று மீன்பிடிப்பது வழக்கம். எனவே தவறுதலாக இலங்கை எல்லைக்குள் சென்றுவிடுவது உண்டு. மேலும் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடித்து வருகிறார்கள். எனினும் சில நேரங்களில் படகுகளை சேதப்படுத்துவதோடு கைதும் செய்கிறார்கள்.

எனவே இன்று ஏராளமான மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளை கைப்பற்றியதோடு, 11 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: