தமிழ்லீடர்

இலங்கை பிரபலங்களின் வீட்டினை அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு!!!

இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேராவின் வீட்டிலிருந்து வெற்று கொக்கேயின் வில்லைகளை மீட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி அண்மையில் டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் சில வீடுகளில் இன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தேடுதலை மேற்கொண்டனர்.

இதன் போது பாடகர் அமல் பெரேராவின் விட்டிலிருந்து வெற்று கொக்கேயின் வில்லைகளை மீட்டுள்ளதுடன் நடிகர் ரயன் வேன் ரோயனின் வீட்டிலிருந்து இலத்திரனியல் தராசு ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இதனையடுத்து குறித்த இரு நபர்களின் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: