தேசிய பொருளாதார சபையின் செயலாளர் பேராசிரியர் லலித் சமரக்கோன் இலங்கை பெற்ற கடன்களை அடுத்த ஆண்டு திருப்பிச் செலுத்தக்கூடிய ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டென தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் லலித் சமரக்கோன் நாட்டின் அரசியல் நிலைக்கு மத்தியிலான பொருளாதார நிலை மற்றும் . மூடீஸ் முதலீட்டுச் சேவைகள் அமைப்பின் தரப்படுத்தல் தொடர்பாகவும் தெளிவுபடுத்தி கூறினார்.
அடுத்த ஆண்டு செலுத்த வேண்டிய தவணை கடன் தொகை 150 கோடி டொலராகும். மத்திய வங்கியிடம் 720 கோடி டொலர் பெறுமதியான பணம் ஒதுக்கும் என்றும் பேராசிரியர் லலித் சமரக்கோன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹவும் உரையாற்றினார் எந்தவொரு அரசும் கடன் பெறலாம். எனினும், ஆட்சியில் உள்ள அரசு அதனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பை கொண்டுள்ளது. கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவையில்லை என அமைச்சர் கூறினார்.
நாட்டிற்குள் எதுவித அரசியல் நெருக்கடி நிலவினாலும் அது குறித்து வெளிநாடுகளுக்கு புறம் கூறுவது தாய்நாட்டிற்கு இழைக்கும் பாறிய துரோகம் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.