தமிழ்லீடர்

இலங்கை பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் கைதிகள் மீது தாக்குதல்.

இலங்கை சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் மீது இலங்கை பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான சி.சி.ரி.வி காணொளிகள் அம்பலமாகியுள்ளன.

மேற்படி கொழும்பு மருதானை – சி.எஸ்.ஆர். மண்டபத்தில் இன்று காலை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் இந்த காணொளிகளை வெளியிட்டிருக்கின்றார்.

மேலும் அம்பாந்தோட்டை-அங்குனுகொலபெலஸ்ஸ என்ற பகுதியிலுள்ள சிறைச்சாலைக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் கடந்தவருடம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி மேற்படி இந்த சம்பவம் பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: