இலங்கை வரலாற்றில் அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு!

தெஹிவளைப் பகுதியில் 200 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருட்களுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த போதைப்பொருள் 2400 மில்லியன் ரூபா பெறுமதி என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பிலே இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

தெஹிவளை, கவ்டான வீதியில் உள்ள வீடொன்றிலே ஹெரோயின் மத்திய நிலையம் ஒன்று பிடிபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன.

அங்கு கேட் பெட்டிகள் மற்றும் பயணப் பொதிகள் உள்ளிட்ட வீட்டின் அனைத்து இடங்களிலும் 278 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஹெரோயின் போதைப் பொருள் இலங்கை வரலாற்றில் அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் எனவும், இதற்கு முன்னர் கடந்த 2013 ஆகஸ்ட் 31ஆம் திகதி ஒருகொடவத்தை பிரதேசத்திலுள்ள கொள்கலன் களஞ்சியசாலையில் வைத்து கிறீஸ் டின்களில் கொண்டுவரப்பட்ட 261 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி ரூபா 303.6 கோடிக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது தவிர குறித்த வீட்டில் இருந்து ரூபா 7.5 கோடி பெறுமதியான கொக்கைன் போதை பொருள் 5 கிலோ கிராமும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: