இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் கைது!

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றினால் தவணை முறையில் பெற்றுக்கொண்ட உழவு இயந்திரம் மற்றும் கார் ஆகியவற்றுக்கு தவணைக் கட்டணம் செலுத்தாதபடியால், முறைப்பாடு செய்வதற்கு குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

வாகனங்களுக்கான ஆவணங்களுடன் 1,000 ரூபா பணத்தையும், முறைப்பாடு பதிவு செய்த அதிகாரிக்கு வழங்கியுள்ளதோடு, பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை பெற்றுக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனையை சேர்ந்த 72 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை இன்று ஏறாவூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: