தமிழ்லீடர்

இளம் தாயார் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை முயற்சி!!!

ஒன்றரை வயது குழந்தையின் தாயொருவர் தனக்கு தானே தீ வைக்க முயன்றார்.எனினும் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேற்படி கிளிநொச்சி விசுவமடுவைச் சேர்ந்த பிரசாந்தன் மேனகா (வயது -20) என்ற இளம் தாயாரே இவ்வாறு உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.எனவே இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண் நேற்று காலை தனது குழந்தையையும் அழைத்துச் சென்று அடர்ந்த பற்றைக்குள் இவ்வாறு தனக்குத் தானே தீவைத்தார். 

எனினும் குழந்தையுடன் அவர் பற்றைப் பகுதிக்குள் ஓடிச் செல்வதை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டதால் அவரது ஒன்றரை வயதுக் குழந்தை எந்தவொரு பாதிப்புமின்றி காப்பாற்றப்பட்டது என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். 

எனினும் அவரது உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதால் சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.அதனால் இளம் தாயார் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு இரவு மாற்றப்பட்டார். 

மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.குடும்பத்தகறாறு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: