தமிழ்லீடர்

இழப்பீட்டு பணியகத்திற்கு மூவரின் பெயர்கள் பரிந்துரை

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இழப்பீட்டு பணியகத்திற்கு மூவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு பேரவை இந்த பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.

கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், செல்லத்தம்பி சுமித்ரா, எம்.ஐ.எம்.ரபீக் ஆகியோரின் பெயர்களே ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை கூடிய அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில், மேலும் இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கான நேர்காணல் இடம்பெற்றதாகவும், விரைவில் அவர்களை பரிந்துரைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போருக்குப் பிந்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உருவாக்கப்படும் இரண்டாவது அதிகாரபூர்வ பொறிமுறையான இழப்பீடுகளுக்கான செயலகத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுநிலா

Add comment

Recent Posts

%d bloggers like this: