தமிழ்லீடர்

உங்களால் செய்ய முடியாது ! கூட்டமைப்புக்கு வியாழேந்திரன் பகிரங்க சவால்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய  பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன். இதில் பிரதமர் தரப்புடன் எந்த தொடர்பும் இல்லை.கடந்த காலங்களில் எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வந்தது. எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படவில்லை.

இந்நிலையிலேயே, ஜனாதிபதியிடம் 11 அம்சக் கோரிக்கையினை முன்வைத்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன்.இதில், அரசியல் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு, வேலையற்ற பட்டதாரிகள் விவகாரம், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் உள்ளடங்குகின்றன.தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினாலும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவைகள் தீர்க்கப்படவில்லை. இந்நிலையிலேயே கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன்.தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமைக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஆதரவான கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.தனக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்காது முடிந்தால் நடுநிலை வகித்து காட்டட்டும் என பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு நடுநிலை வகித்தால் தானும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது நடுநிலை வகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாரதர்

Add comment

Recent Posts

%d bloggers like this: