தமிழ்லீடர்

உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு! சாந்தபுரத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி.

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் கனகாம்பிகைக்குளம் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகிய இந் நிகழ்வை கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ப.குமாரசிங்கம் தலைமைதாங்கினார். நிகழ்வின் முதலில் பொதுச்சுடரினை மாவீரன் சாந்தன் அவர்களின் தாயார் மீனா அம்மா ஏற்றி வைக்க பெற்றோர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்த சுடர்களை ஏற்றி அஞ்சலித்தனர். பின்னர் மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் உறவுகளினால் கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சிறப்புரைகளை மேனாள் வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா, சாந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் யோகன், சமூகசேவையாளர் அலன்டீன் ஆகியோர் நிகழ்தினார்கள் இறுதியாக மதிய போசனத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு முன்னாள் போராளி அமரர் வெற்றி அவர்களின் ஞாபகார்த்தமாக மரக்கன்றுகள் அவரது துணைவியாரால் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

நாரதர்

Add comment

Recent Posts

%d bloggers like this: